Latest News
தமிழ்ச் சமுதாயத்தை தவறாக வழி நடத்துகிறார் சீமான்…பெண் அமைச்சர் குற்றச்சாட்டு…
நாம் தமிழர் கட்சியை சார்ந்த வரும் யூ-டியூபருமான ‘சாட்டை’ துரை முருகன் நேற்று காவல் துறையனரால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என காவல் துறைக்கு சவால் விட்டுருந்தார். இது குறித்து தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தமிழ்ச் சமுதாயத்தை சீமான் தவறான பாதையில் வழி நடத்துகிறார் சீமான் என்றார். அதே போல இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான் கட்சி நடத்த பணம் எங்கே இருந்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே எனவும் சொல்லியிருக்கிறார்.
சீமான் நேற்று ஒரு கருத்து, இன்று ஒரு கருத்து என நிலை இல்லாமல் பேசக்கூடியவர், அவர் தனடு மன நிலையை சரிபார்க்க வேண்டும் எனவும் சொன்னார். அவர் பேசும் போது ஜாதி, மத பிரிவினைகளை உண்டு பண்ணும் விதமாக பேசி வருகிறார்.
அவர் நாக்கை அடக்கி பேசுவது நல்லது, பொறுப்புணர்வுடன் செயல் பட்டு வரும் முதலமைச்சருக்காகத்தான் தங்களது கட்சிக்காரர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்றும் பேசினார் அமைச்சர் கீதா ஜீவன்.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை பற்றி பேசும் போதெல்லாம் அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார், சீமானின் தம்பி திரைப்படத்தில் ஒரு சொல்லைப்பயன் படுத்தியதற்காக மண்ணிப்பு கேட்வர் மீண்டும், மீண்டும் அதே வார்த்தையை பயன்படுத்தி வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருக்கின்றார்.