தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 9 பேர் இறந்துள்ளதாகவும் 8000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டால் சர்ச்சை உருவாகியுள்ளது.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ஒரு டிவீட்டில் ‘தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு; 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்.’ எனக் கூறியிருந்தார. ஆனால் இதுவரை கொரோவால் உயிரிழப்பு எதுவும் ஏறபடவில்லை. இதனால் இந்த டிவிட்டுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதனால் அந்த டிவீட் நீக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!’ எனத் தெரிவித்துள்ளார்.