Latest News
இந்த வாரம் முதல் புதிய தளர்வுகள் வருகிறதா
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து புதிய தளர்வுகள் வழங்குவது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக, சில தளர்வுகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டன.
அந்த 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 23 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலில் உள்ளன.
ஜூலை 5ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மாவட்ட வகைகளின் அடிப்படையில் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அதிகரித்து வரும் நிலையில், அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 11 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி, 11 மாவட்டங்களில் தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் திறப்பு, அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஹோட்டல்கள்களில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.