கொரோனா மருந்து- பிரதமர் நேரில் ஆய்வு

கொரோனா மருந்து- பிரதமர் நேரில் ஆய்வு

கடந்த வருடம் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலிவாங்கி விட்டது. கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் லேசாக ஊடுருவிய கொரோனா வைரஸ் மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களில் ருத்ர தாண்டவம் ஆடி பல உயிர்களை சாய்த்து விட்டது.

சினிமா, அரசியல், ஆன்மிகம் என அனைத்து துறைசார்ந்த முக்கிய பிரபலங்கள் மரணம் அடைந்தனர்.

உலகம் முழுவதும் இதே நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா நோய்க்கு மருந்து கண்டு பிடித்ததாக சொல்லப்பட்டது.இன்னும் அது பயன்பாட்டுக்கு வராத நிலையில் புதியதாக சைடஸ் நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள சைடஸ் நிறுவனத்தில் கொரோனா மருந்துப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்டார்.