தமிழக அரசுக்கு தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளுங்கள் என ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் தற்போது சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசோடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து தமிழக அரசுக்குத் தேவைப்பட்டால் கோவையில் உள்ள தங்கள் ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக உபயோகித்துக்கொள்ளலாம் கூறியுள்ளார் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ். மேலும் தங்கள் ஈஷா தன்னார்வலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒவ்வொரு தன்னார்வலரும் பாதிக்கப்பட்டுள்ள இருவருக்காவது உணவளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.