ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !

ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !

கடந்த மாதம் கோயம்புத்தூர் ஈஷா வளாகத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1100 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று காலை வரை 67 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மதியம் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில் திடீரென நேற்று இரவு தமிழகத்தில் மேலும் 50 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இது தமிழக மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த 50 பேரில் 43 பேர் டெல்லியில் தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே போல கடந்த மாதம் கோயம்புத்தூர் ஈஷா மைதானத்தில் நடந்த சிவராத்திரியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு சோதனை நடத்தவேண்டும் என கருத்துகள் சொல்லப்பட்டு வந்தன. இது குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் ‘தேவைப்பட்டால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைக் கண்டறிந்து சோதனை நடத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.