Corona (Covid-19)
தினமும் 2 மணி நேரம் திறக்கப்படுகிறதா டாஸ்மாக்? அமைச்சர் தங்கமணி சொல்வது என்ன?
ஊரடங்கால் மூடப்பட்டுள்ள் டாஸ்மாக்குகள் நாளை முதல் தினமும் இரண்டு மணிநேரம் திறக்கப்படும் என்ற செய்திகளில் உண்மை இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.
இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் குடி நோயாளிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கேரளாவில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக தினமும் 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவின.
இதுகுறித்து அமைச்சர் பேசியுள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் தங்கமணி ‘ஏப்ரல் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என பரவும் செய்திகள் உண்மையில்லை. அது போன்ற வதந்திகளைப் பரப்புவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்துள்ளனர்.