இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு – முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

213

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வந்துள்ள நிதி எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதையடுத்து திரைபிரபலங்களும், தொழிலதிபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை வசூலானது எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏப்ரல் 2 வரை மொத்தமாக 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 3ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

பாருங்க:  இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவோம்
Previous articleகொரொனா பாடல் பாடி அசத்திய சாண்டி மாஸ்டர்
Next articleபாடலாசிரியர் வைரமுத்துவை தொடர்ந்து நம்ம சூப்பர் ஸ்டாரின் சூப்பர் அப்டேட்