தமிழக முதல்வர் இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸூக்கு யாரும் பலியாகாத நிலையில் நேற்று மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார். மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கில் முதல் நாள் இன்று முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரவு ஏழு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது பேச்சில் மக்களுக்கான நிவாரண உதவிகள் பற்றி குறிப்பிடப்படும் எனத் தெரிகிறது.