பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் ! அடுத்த நகர்வு இதுதான் !

பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் ! அடுத்த நகர்வு இதுதான் !

திமுக வின் பொதுச்செயலாளராக துரைமுருகன் பதவி ஏற்பாதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திமுக பொதுச்செயலாளரும் முதுபெரும் தலைவருமான பேராசிரியர் க அன்பழகன் கடந்த 5 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி காலியானது. அந்த பதவிக்கு கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன்தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக தற்போது கட்சியில் தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.