கொரொனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் தற்போது சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தினம்தோறும் வழங்கப்படும் ஆரோக்யமான உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
- காலை 7 மணி – இஞ்சி மற்றும் எலுமிச்சைபோட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
- காலை 8.30 மணி – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், பழரசம்
- காலை 11 மணி – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
- மதியம் 1 மணி – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்)
- மாலை 3 மணி – மிளகுடன் மஞ்சள் கலந்த வெந்நீர்
- மாலை 5 மணி – கொண்டைக்கடலை சுண்டல்
- இரவு 8 மணி – 2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை