தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ல் இருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11000 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 67 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலை சேர்ந்த 28 வயதுடைய இளைஞருக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களுக்கும், மதுரையைச் சேர்ந்த இருவருக்கும் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.