Corona (Covid-19)
மது கிடைக்காததால் மற்றுமொரு கலாட்டா சம்பவம்! கிணற்றுக்குள் சென்ற மதுபாட்டில்!
சென்னையில் மது கொடுத்தால்தான் கிணற்றில் இருந்து வெளியே வருவேன் என சொன்னவருக்கு வாளியில் வைத்து மது அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 124 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.
கடந்த 14 நாட்களாக மது கிடைக்காததால் மதுப்பழகக்த்துக்கு அடிமையானவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஆங்காங்கே தற்கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையின் ஆவடிப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இதுபோல மதுக் கிடைக்காத விரக்தியில் வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். கீழே யாராவது வந்தால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்ட வாளியில் அவருக்கு மது அனுப்பி மேலே வரவழைத்துள்ளனர். மேலே வந்து இன்னும் சரக்கு வேண்டும் என அடம்பிடித்து யாரிடமும் சரக்கு இல்லாததால் மறுபடியும் கிணற்றினுள் குதித்து மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதன்பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் சென்று, அவர்கள் வந்து கீழே இறங்கி அவரை சமாதானப்படுத்தி மீட்டுள்ளனர்.