Published
2 years agoon
By
Vinoசினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது. இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி) மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்துள்ளனர்.
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா