அரிசிக்கு பதில் மளிகை பொருட்கள்… விட்டால் ஊட்டிவிட சொல்வார்கள் போல – ரஜினியை வைத்து இயக்குனரும் நடிகரும் மோதல்!

172

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது.  இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இயக்குனர் கௌதமன் ‘ரஜினி பணத்துக்குப் பதில் மளிகைப்பொருட்களாக வாங்கிக் கொடுத்திருக்கலாம்’ எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள எஸ் வி சேகர் ‘ரஜினியை விமர்சனம் செய்து பிரபலம் ஆகலாம் என்று பார்க்கிறார். ஆனால் அது நடக்காது. விட்டால் ரஜினியை ஊட்டி விட சொல்வார்கள் போல’ என நக்கலாக பேசியுள்ளார்.

பாருங்க:  ஆதரவற்றவர்களை வெளியில் தெரியப்படுத்தி உதவி செய்து வரும் நாடக நடிகர்
Previous articleஎன் வீட்டை மருத்துவமனையாக்கிக் கொள்ள அரசு அனுமதிக்குமா? கமல்ஹாசன் டிவிட்!
Next articleஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!