தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 96 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 738 ஆக இருந்தது,
சில நிமிடங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், புதிதாக 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உள்ளவர்களின் எண்ணிக்கை 834 ஆகியுள்ளது. மேலும் இன்றிரவு வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்கும் புதிய கிட்கள் வர இருப்பதாகவும் அதன்மூலம் 30 நிமிடத்தில் கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.