ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை!

ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 50 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் பலியாகி இருந்தார்.சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமாகி இருந்தனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 17 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.