Entertainment
புகழ்பெற்ற திருவையாறு அசோகா அல்வா
திருநெல்வேலி என்றாலும் அல்வா திருவையாறு என்றாலும் அல்வாதான் ஒன்று தாமிரபரணி தண்ணீரில் செய்வது மற்றொன்று காவிரி தண்ணீரில் செய்வது.
இந்த நீரில் செய்வதாலோ என்னவோ இந்த அல்வா இங்கு ரொம்பவும் பேமஸ் என்றே சொல்லலாம்.
திருவையாறு என்றாலே தியாகராஜர் உற்சவத்துக்காக களைகட்டும் ஒரு இடமாகும்.
இங்கு பல சங்கீத மேதைகள் வருடத்திற்கு ஒரு நாள் நடக்கும் திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்காக வருவார்கள்.
அடிக்கடி தியாகராஜர் ஜீவசமாதியை வழிபாடு செய்ய பல சங்கீத மேதைகள் வருவார்கள். அவர்கள் எல்லாம் விரும்பி வாங்கி செல்வது இந்த ஆண்டவர் அசோகா அல்வாவைத்தான்.
இரண்டாம் உலகப்போரின்போது அல்வா தயாரிக்க கோதுமை, ஜீனி தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்போது கடையை நடத்திய சுப்பையர் பயத்தம் பருப்பு மாவு மற்றும் வெல்லம் கலந்து அல்வா செய்தாராம்.
அந்த அல்வாவை வாங்க சுற்றுவட்டாரம் அனைத்திலும் இருந்து அதிகமான ஆட்கள் வருவார்களாம்.
அப்படி இந்த கடை பிரபலமாகியுள்ளது. இப்போது பயத்தம் பருப்பு மாவு எல்லாம் இல்லை. சுத்தமான கோதுமை மற்றும் சர்க்கரையில் தான் இந்த அல்வாவை தயார் செய்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண்டவர் அல்வா கடை என்று கேட்டாலே அனைவரும் சொல்லி விடுவார்கள்.
பல வருட பாரம்பரியமான இந்த கடையில் உள்ள அசோகா என்ற இனிப்பையும், சூடான கோதுமை அல்வாவையும் சுவைப்பதே அலாதி இன்பமாக இருக்கும்.
பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருப்பதி என்றாலே லட்டு, திருவையாறு என்றாலே அசோகா அல்வா என்பதே இவர்களது கடையின் போர்டிலேயே எழுதி போடப்பட்டுள்ளது.
