திருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

46

சென்னையில் உள்ள ஒரு பகுதியில் திருடன் ஒருவன் ஒரு நபரிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அப்போது அவனை திடீரென ஒரு எஸ்.ஐ மடக்கி பிடிக்க பார்க்கிறார்.

இருப்பினும் விடாமல் விரட்டிக்கொண்டு பைக் மேல் எல்லாம் விழுந்து எழுந்து அந்த திருடனை துரத்தி பிடித்து விடுகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சென்னை கமிஷனர் திரு மகேஷ்குமார் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டி இருந்தார். இது சினிமா காட்சி அல்ல என கூறி இருந்தார்.

திருடனை விரட்டிய எஸ்.ஐ பெயர் அண்ட்லின் ரமேஷ். பிடிபட்ட நபரிடம் இருந்து 11க்கும் மேற்பட்ட மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருடனை லாவகமாக பிடித்த எஸ்.ஐ அண்ட்லின் ரமேஷை நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

https://twitter.com/copmahesh1994/status/1332386843636076544?s=20

பாருங்க:  கள்ளக்காதலனுடன் காட்டுக்குள் உல்லாசம் ; அங்கு வந்த 6 பேர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்