வாட்ஸ்ஆப் இனி விண்டோஸ் ஃபோன்களில் இயங்காது – வாட்ஸ்ஆப் நிறுவனம்!

360
வாட்ஸ்ஆப் இனி விண்டோஸ் ஃபோன்களில் இயங்காது

டிசம்பர் 31, 2019ல் இருந்து வாட்ஸ்ஆப் செயலி விண்டோஸ் ஃபோன்களில் இயங்காது என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து வசதிகளையும் பெற்ற, தகவல் பறிமாற்ற செயலியாக வாட்ஸ்ஆப் இருந்து வருகிறது. நாடு முழுவதும் கோடி கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, தற்போது பலவிதமான அப்டேட்களை கொண்டு வருகிறது வாட்ஸ்ஆப். பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் பயனாளர்களுக்கு ஏற்ப பல அப்டேட்களை கொண்டு வருகிறது. தங்களது அப்டேட்களை ஏற்கும் செயல்திறன் இல்லாத ஃபோன்களில் இருந்து வாட்ஸ்ஆப் தனது சேவைகளை நிறுத்தி வருகிறது.

Blackberry OS, Blackberry 10 மற்றும் Windows 8.0 வெர்ஷன்களில் இருந்து வாட்ஸ்ஆப் கடந்த ஆண்டே சேவையை நிறுத்தியது. தற்போது, அனைத்து Windows ஃபோன்களில் இருந்தும் சேவையை நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

ஆன்ட்ராய்ட் வெர்சன் 2.3.7 அல்லது அதற்கும் கீழான மாடல்களிலும், ios 7 மற்றும் அதற்கு கீழுல்ல மாடல்களிளும் பிப்ரவரி 1, 2020 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது என ஏற்கனவே வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்த தடை; வாட்ஸ் அப் நிறுவனம்!