டிக் டாக் – ப்ராங்க் ஷோவிற்கு தடை – உயர் நீதிமன்றம்!

412

ப்ராங்க் ஷோ (Prank Show)வை எடுக்க கூடாது எனவும், அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற குழு உத்திரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில், ” டிக் டாக் ‘ஆப்’பால் பல தவறுகள் நடைபெறுகின்றன. இந்தோனேசியாவில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி ‘டிக் டாக்’ஆப்’பை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறிருந்தார்.

அதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் குழு, அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்திரவிட்டனர்.அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஒரு தனிநபரை அவர் எதிர்பாராத நேரத்தில் கிண்டல், கேலி செய்வது, ஒருவரின் மனநிலையை பாதிக்கும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி அவரை உயிரிழக்க வைக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.

எனவே, ப்ராங்க் ஷோ எடுப்பதற்கும் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் தடை விதித்து உத்திரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ் சுந்தர் அமர்வு.

பாருங்க:  ஜியோவில் இனி இலவசமாக போன் பேச முடியாது? jio stops free voice calls!