அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்த தடை; வாட்ஸ் அப் நிறுவனம்!

347
அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்த தடை

வாடஸ் அப் போன்று பல போலி செயலிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது, அதற்கும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் சம்மதம் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் பறிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிற செயலி வாட்ஸ் அப். 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் பை வாங்கியது. பின் பல வசதிகள் கொண்டு வரப்பட்டன.
அது மட்டுமில்லாமல், போலி தகவல்களும் பரிமாறப்பட்டன.

அதே போல், வாடஸ் அப் போன்று பல போலி செயலிகள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றிருக்கிறது. பல வெப்சைட் ஹாக்கர்கள் இச்செயலை செய்துள்ளனர்.

இந்த போலி அப்களில் சில வாட்ஸ் அப் கட்டுப்பாடுகளை மீறுவதற்க்கும், ஏமாற்றுவதற்குமான செயல்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது போன்ற அப் களில், லாஸ்ட் சீன் அவர்கள் குறித்து வைத்த நேரத்தையே காட்டும், அதோடு ஒருவர் அனுப்பிய மெசெஜ்ஜை டெலிட் செய்தால், பிறகு அதை யாராலும் பார்க்க இயலாது, ஆனால் இந்த போலி அப் களில் அதை பார்க்கலாம்.

போலி அப்களான வாட்ஸ்அப் ப்ளஸ் (whatsapp plus) மற்றும் ஜிபி வாட்ஸ் அப்( GB whatsapp) ஆகிய செயலிகளை பயன்படுத்துவோரின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு செயலிகளும் அங்கிகரிக்கப்படாத செயலிகள். எனவே அதை பயன்படுத்துவோரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாருங்க:  உங்ககிட்ட ஜியோ சிம் இருக்கா? இந்த வீடியோவ முழுசா பாருங்க!