ஆசிரியர் தகுதி தேர்வு 2019

TET EXAM 2019 : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆசிரியர் தகுதி தேர்வான டெட்(TET ) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே ( ஏப்ரல் 12 ) கடைசி நாள். 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் எழுத வேண்டும், அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 50% தேர்ச்சியுடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 முதல் 8ம் வகுப்புவரை எடுக்க இரண்டாம் தாளில், இளைநிலை பட்டப்படிப்பில் 45% தேர்ச்சி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
150 மதிப்பெண்களுக்கு, நடத்தப்படும் இத்தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும்.

மார்ச் 15ம் தேதி விண்ணப்பிக்கும் நாள் ஆரம்பித்து, ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பதாரர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை, விண்ணப்பிக்கும் நாட்களை நீட்டித்து தர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்கும் நாளை நீட்டித்தது ஆசிரியர் தேர்வு மையம்.இதனால், TET தேர்வுக்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் இன்றே ஆகும்.