2019 பொறியியல் கலந்தாய்வு – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது!

254
2019 பொறியியல் கலந்தாய்வு

2019ம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்,அந்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை, 22 வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், அப்பணியில் இருந்து விலகிக் கொள்வதாக பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே சுரப்பா அறிவித்திருந்தார்.
அதனால், இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வை யார் நடத்த போவது என்பதில் குழப்பம் ஏற்ப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டில், மொத்தம் 570க்கும் மேற்ப்பட்ட பொறியியல் கல்வி இயங்கி வருகிறது. இதில் ஏறத்தாழ, 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
தற்போது, ஏப்ரல் 19ம் தேதி ப்ளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வு பற்றி எதுவும் தெரிவிக்காத நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்து வந்தனர்.

தற்போது, தொழில்நுட்ப இயக்கம், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த போவதாகவும், அதற்கு விண்ணப்பிப்பதற்கான அறிக்கை ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

பாருங்க:  2019 'நீட்' தேர்வு எழுத முடியாமல் 500 மாணவர்கள் தவிப்பு!