இந்தியா முழுவதும், மே 5ம் தேதி நீட் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், ஏப்ரல் 15ம் தேதி அதற்கான ஹால் டிக்கெட்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் பங்குகொள்ள இருக்கின்றனர்.இந்தாண்டு நாடு முழுவதும், 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இதில் தமிழகத்தில், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பங்குகொண்டு, அதில் 45336 மாணவர்கள் வெற்றி பெற்றனர், பாஸ் சதவீதம் 39.55% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.