சென்னை ஐஐடி நிறுவனம் தேசிய அளவில் சாதனை படைத்தது!

277
சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி நிறுவனம் முதல் இடம் பிடித்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது.தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம், பொறியியல், மருத்துவம், சட்டம், மருந்தியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழியில், சிறந்த நிறுவனத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, தரவரிசை பட்டியலுக்கான விதிமுறைகள் அடிப்படையில், கற்றல், கற்பித்தல், விடுதி வசதி, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படையின் கீழ் சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுப்பர்.அந்தவகையில், நேற்று டெல்லியில் நடந்த விழாவில், 2019 சிறந்த கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை ‘குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்’ வெளியிட்டார். மேலும், அக்கல்வி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதில், தேசிய அளவில், சென்னை ஐஐடி முதலிடமும், பெங்களூர் ஐஐஎஸ்சி இரண்டாம் இடமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.சென்னை ஐஐடி, தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!