என்னது கொரோனா காற்றில் பரவுமா? அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க ஆய்வு முடிவு!

269

கொரோனா நோயாளிகள் பேசும்போதும் மூச்சு விடும்போது வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2900 ஐ தாண்டியுள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வின் முடிவில் வேறு விதமான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கொரோனா நோயாளிகள் பேசும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ வைரஸ் பரவலாம் என அமெரிக்கா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னர் போல இல்லாமல் எல்லோரும் முகமூடிகள் அணியவேண்டும் என வற்புறுத்தியுள்ளது. இந்த முடிவு மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலம் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !
Previous articleநாளை இரவு… விளக்கு ஏற்றும் முன்னர் செய்யக்கூடாதது – என்ன தெரியுமா?
Next articleஊரடங்கால் பரிதவித்த நோயாளி – உணவு ஊட்டிவிட்டு மருத்துவர் ஆறுதல்!