சென்னையில் உள்ளது புகழ்பெற்ற வட பழனி முருகன் கோவில். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜகோபுரத்துடன் கட்டப்பட்டது. இந்த கோவில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.அருகே கோடம்பாக்கம் இருப்பதால் புகழ்பெற்ற படங்களின் ஷூட்டிங்குகள் இங்கு எடுக்கப்பட்டது.
திரைப்பிரபலங்கள் அதிகம் இங்கு வருகை தருகின்றனர். அண்ணாசாமி நாயக்கர் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.
1890ம் ஆண்டு எளிய கூரை கொட்டகையுடன் கட்டப்பட்ட இக்கோவில் இன்று பெரிய கோவிலாக உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இன்று கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
இதற்காக யாக சாலையில் இருந்து திருக்கலசங்கள் புறப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது.