திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

23

கொரோனா பரவல் வேகம் முன்பை விட அதிகமாக இருப்பதாலும் இது இரண்டாம் அலை என்பதாலும் மீண்டும் அனைத்து நாடுகளிலும் கொரோனா முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதுமே கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது.

இதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி கோவிலுக்கு நாளொன்றுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால் அதிலும் இலவச தரிசனத்துக்கு அதிக பக்தர்கள் வந்து செல்வதால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விரைவு தரிசனம் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ஊரடங்கால் பரிதவித்த நோயாளி – உணவு ஊட்டிவிட்டு மருத்துவர் ஆறுதல்!
Previous articleஏ.ஆர் ரஹ்மானின் பணிவு குறித்து விவேக்
Next articleநடராஜை திட்டிய ரசிகர்கள் பதில் கொடுத்த நடராஜ்