தமிழ்நாட்டில் தனிக்கோவிலாக திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கென தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சரஸ்வதி பூஜையன்று மக்கள் குவிந்து விடுவர்.
தங்கள் வீட்டு குழந்தைகளை சரஸ்வதி பூஜை அன்று இக்கோவிலுக்கு அழைத்து சென்று பெற்றோர்கள் வழிபடுவார்கள். கல்வியில் நல்ல நிலையை அடைய ஞானம் தரும் கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு வருவார்கள்.
இன்று சரஸ்வதி பூஜையாதலால் இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளது. இக்கோவிலில் குழந்தைகள் தங்கள் நோட்டு புத்தகங்களை சரஸ்வதியம்மன் பாதத்தில் வைத்து வணங்குவர்.
இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் கூத்தனூர் சரஸ்வதி கோவில் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.











