இன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

124

முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. முருகன் சூரபத்மனை எதிர்த்து போர்புரிந்து தளபதி வீரபாகுவை போர்ப்படை தளபதியாக நியமித்து சூரபத்மனை வெற்றிகொண்ட நிகழ்வு திருச்செந்தூரில் நடந்தது இந்த நிகழ்வே கந்த சஷ்டி விழா.

முருகன் என்றால் ஆறுமுகன் அவனின்  புகழ் பாடும் வகையில் தான் கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முருகனின் அனைத்து திருத்தலங்களிலும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது என்றாலும் . திருச்செந்தூரில்தான் முருகப்பெருமான் போர்புரிந்ததால் அங்கு கந்த சஷ்டி விழா முக்கியத்துவம் பெறுகிறது.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இருந்து கந்த சஷ்டி விழாவுக்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள் இங்கு வந்து 6 நாட்கள் விரதம் இருந்து தினமும் திருச்செந்தூர் கடலில் குளித்து அங்குள்ள கந்த சஷ்டி மண்டபத்தில் விரதம் இருந்து வழிபடுகிறார்கள்.

சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு முடிந்த உடன் விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.

கந்த சஷ்டி விரதம் தருவது வாழ்க்கையில் அனைத்து ஏற்றங்களையும் தரும் வாழ்க்கையில் நன்மையை தரும் ஒரு உயர்ந்த விரதமாகும். குழந்தை இல்லாதோர் கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பது உறுதி என்பது ஆன்றோர்களின் வாக்கு.

பாருங்க:  மேக்கப்பே இல்லாமல் நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க!!
Previous articleமீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை- மத்திய அரசு
Next articleஇன்று குருப்பெயர்ச்சி விழா