இனிய பொங்கல் திருநாள் இன்று

72

உலகம் முழுவதும் தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களால் மட்டுமல்ல விவசாயம் செய்யும் அனைவராலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது மற்ற இடங்களில் சங்கராந்தி என பெயரிடப்பட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைத்து விதைந்த நெல்மணிகளை மற்றும் மற்ற பயிர்களையும் சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதே பொங்கல் பண்டிகையின் நோக்கம்.

புதுப்பானையில் பொங்கலிட்டு அதை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதே பொங்கல் பண்டிகையின் சிறப்பு.

அந்தக்காலங்களில் வீட்டு முற்றங்களில் பொங்கல் வைக்க முதல் நாளே மாவிலை தோரணம் கட்டி. மாக்கோலம் இட்டு அழகாக பொங்கல் கொண்டாடினார்கள் அது ஒரு அழகிய நிலாக்காலம். இப்போது உள்ள நவீன வாழ்க்கை முறையில் வீட்டில் முற்றங்களே இல்லை அப்படி ஆகி விட்டது.

எனினும் காலத்துக்கேற்றவாறு நாமும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி வருகிறோம்.

மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகையைத்தான் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் . பொங்கலோடு முடிந்து விடாமல் நமக்கு கை கொடுத்த கால்நடையை வணங்குவதற்காக மாட்டுப்பொங்கல் திருநாளும் அடுத்த நாள் கொண்டாடுகிறோம். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் நடக்கும்.

இப்படி பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பாருங்க:  வாட்ஸப் புதிய கொள்கை- பயனாளர்கள் எதிர்ப்பு