Entertainment
இன்று ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு என்பது நதியை கொண்டாடும் விழாவாகும். நீர் நிலைகளில் முக்கியமாக காவிரி ஓடும் திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் விழா களை கட்டும்.
பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றில் புதிய மஞ்சள் கயிறு முடிந்து கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் காவிரித்தாயை வழிபடலாம்.
திருச்சி காவிரிக்கரையில் இவ்விழாவிற்கு கூட்டம் அலைமோதும் தற்போதைய கொரோனா தொற்று பிரச்சினையால் இது போன்ற அனைத்து விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.