Connect with us

6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை – மாணவர்கள் அதிர்ச்சி!

6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

கல்வி செய்திகள்

6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை – மாணவர்கள் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்புகளுக்கன கலந்தாய்வு தொடங்குவதற்கு முன், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்ன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் தரவரிசைப்படுத்தபடுவது வழக்கமான ஒன்று.

அந்த பட்டியலில் அடிப்படையில்தான் எந்த கல்லூரியில் தேர்ச்சி அதிகம் என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டு அந்த கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பார்கள். இந்நிலையில், இந்த தரவரிசைப்பட்டியலில் அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமாரி, பெரம்பலூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள 8 தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த கல்லூரிகளில் மாணவர்கள் பொறியியல் பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாருங்க:  TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு!

More in கல்வி செய்திகள்

To Top